குப்பை கொண்டு செல்லும் வண்டியில் பிரதமர் மோடி புகைப்படம் - தூய்மைப்பணியாளர் பணியிடை நீக்கம்

குப்பை கொண்டு செல்லும் வண்டியில் பிரதமர் மோடி, உ.பி. யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-17 20:40 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி தூய்மைப்பணியாளர் பாபி. இவர் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஜெனரல்கஞ்ச் பகுதியில் கடந்த சனிக்கிழமை வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, பாபி குப்பை கொண்டு செல்லும் வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார்.

பிரதமர் மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து தூய்மைப்பணியாளர் பாபி சரிவர பணியை செய்யவில்லை என கூறி அவரை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்