இந்தியாவில் பேறுகால மரணங்கள் 6.36 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் தரமான பேறுகால சேவை இலவசமாக அளிக்கப்படுவதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.;

Update:2024-02-08 02:31 IST
இந்தியாவில் பேறுகால மரணங்கள் 6.36 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "ஐ.நா. குழு ஒன்றின் 2020-ம் ஆண்டு அறிக்கைப்படி, கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவில் பேறுகால மரணங்கள் 384 ஆக இருந்தன. 2020-ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 103 ஆக குறைந்துவிட்டது.

மேற்கண்ட 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் பேறுகால மரணங்கள் 2.07 சதவீதம் அளவுக்கே குறைந்தன. ஆனால், இந்தியாவில் பேறுகால மரண வீழ்ச்சி 6.36 சதவீதமாக உள்ளது. பேறுகால மரணங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

'பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்' திட்டத்தின்கீழ், கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் தரமான பேறுகால சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கர்ப்பிணிகள், பாதுகாப்பாக குழந்தையை பெற்றெடுப்பதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுதவிர கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன" என்று ஸ்மிரிதி இரானி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்