மராட்டியம்: குடியிருப்பு வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
புனே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன், சர்வதேச போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது.
புனே,
மராட்டியத்தில் புனே போலீசாருக்கு, விஷ்ரந்த்வாதி பகுதியில் போதை பொருள் இருப்பது பற்றிய உளவு தகவல் தெரிய வந்தது. லோஹிகாவன் பகுதியில் விக்னஹர்த குடியிருப்பு வளாகத்தில், போதை தடுப்புக்கான குற்ற பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய நபர்களான ஸ்ரீனிவாஸ் கோத்ஜே, ரோகித் பெந்தே மற்றும் நிமிஷ் அப்நாவே ஆகிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மெபித்ரோன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதில், முதல்கட்ட விசாரணையில் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.