சரத்பவார் குறித்து அவதூறு கருத்து; 36 நாட்கள் சிறையில் உள்ள நடிகைக்கு ஜாமின்

சரத்பவார் குறித்து அவதூறு கருத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக மராத்திய நடிகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-06-22 11:45 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் பிரபல நடிகை கிதிகி சிதலி (வயது 29). இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூகவலைதளமான பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, கிதிகி சிதலி பல்வேறு இடங்களில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடிகை கிதிகி சிதலியை கடந்த மாதம் 15-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நடிகை கிதிகி கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு தானே கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் உள்ள நடிகை கிதிகி ஜாமின் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. ஜாமின் கிடைத்ததையடுத்து சரத் பவார் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு 36 நாட்களாக சிறையில் உள்ள நடிகை கிதிகி இன்று மாலை அல்லது நாளை விடுதலையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்