மராட்டியம்: ஆண் நண்பருக்காக சண்டையிட்டு கொண்ட 2 டீன்-ஏஜ் சிறுமிகள்

மராட்டியத்தில் பேருந்து நிலையத்தில் ஆண் நண்பர் ஒருவருக்காக, 2 டீன்-ஏஜ் சிறுமிகள் சண்டையிட்டு கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-08-27 03:20 GMT



அவுரங்காபாத்,



மராட்டியத்தின் பைத்தன் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வந்து போக கூடிய, கூட்டம் நிறைந்த பேருந்து நிலையம் ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி ஒரு வேலையாக வந்துள்ளார்.

அந்த ஆண் நண்பருக்கு மற்றொரு தோழியும் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக செல்வது பற்றிய தகவலை அறிந்த அந்த மற்றொரு டீன்-ஏஜ் சிறுமி உடனடியாக கிளம்பி, அவர்களை தேடி சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் ஒன்றாக சென்றபோது, அவர்களை கண்டறிந்த அந்த ஆடவரின் தோழி, மற்றொரு சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால், பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் அனைவரும் இவர்களை பார்க்க திரண்டு விட்டனர்.

இந்த சம்பவத்திற்கு இடையே ஆண் நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டார். இவர்களது வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் உடனடியாக சிறுமிகள் 2 பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என போலீசார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்