68 வழக்கு... தலைக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டு கைது

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டின் தலைக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2023-03-19 15:15 GMT

ராஞ்சி,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படுபவர்களின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.

அந்த வகையில், ஜார்க்கண்ட் லெட்ஹர் மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்டு தலைவன் சந்தன்குமார் ஹர்வார் மீது பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தன்குமார் தலைக்கு 10 லட்ச ரூபாய் சன்மானமாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்திருந்து தீவிரமாக தேடி வந்தது.

இந்நிலையில், தலைக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டு தலைவன் சந்தன்குமாரை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தன்குமாரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்