உடல்நிலை சரியில்லாத மனைவியை நேரில் பார்க்க முடியாமல் சிறைக்குத் திரும்பிய மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியாவின் மனைவி உடல்நிலம் மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Update: 2023-06-03 18:03 GMT

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் , 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சி.பி.ஐ. கைது செய்தது.

இதையடுத்து ஜாமீன் கேட்டு இவர் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என் கூறியது.

இதனிடையே மணீஷ் சிசோடியாவின் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை காண்பதற்காக மணீஷ் சிசோடியாவுக்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வர மட்டும் அவரது குடும்பத்தினரை சந்திக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதனால் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிஷ் சிசோடியா அவரது வீட்டிற்கு சென்று உடல்நிலை சரியில்லாத மனைவியை பார்க்க விரைந்தார். அதற்குள் அவரது மனைவி உடல்நிலம் மிகவும் மோசமடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதனால் வீட்டிற்கு வந்தடைந்த மணிஷ் சிசோடியோவால் தனது மனைவியை பார்க்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இதற்கிடையே 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், மருத்துவமனை அவரது மனைவி உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்