முதல் மனைவியுடன் 3 நாள், 2-வது மனைவியுடன் 3 நாள் ; 1 நாள் கணவருக்கு விடுமுறை: வினோத சம்பவம்
முதல் மனைவியுடன் மூன்று நாட்களும், இரண்டாவது மனைவியுடன் மூன்று நாட்களும் என பொறியாளர் ஒருவர் அரியானா மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார்.
கவுகாத்தி,
மத்திய பிரதேசத்தில் குருகிராமை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் குருகிராம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது 2020 ஆம் ஆண்டு இவரது மனைவி சீமான் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பொறியாளர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சீமா திரும்பி வரவில்லை.
அப்போது சீமாவின் கணவருக்கும் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. முதல் மனைவிக்குத் தெரியாமல் பொறியாளர் அலுவலகத்தில் பழகிய பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த இரண்டாவது திருமணம் பற்றி முதல் மனைவி சீமாவுக்கு தெரியவந்துள்ளது. கணவருடன் தகராறில் ஈடுபட்ட சீமான் அவருடன் சேர்ந்து வாழ மறுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பின்னர் உறவினர்கள் சீமாவுக்கும் அவரது கணவருக்கும் சமரச பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
கணவரை விவாகரத்து செய்வதன் மூலம் உனக்கு எந்த பலனும் இல்லை என்று சீமாவின் உறவினர்கள் அவரை எச்சரித்து அறிவுரை வழங்கி உள்ளனர். பின்னர் பொறியாளரின் இரண்டாவது மனைவியிடம் சீமா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பின்னர் சீமா விவாகரத்து முடிவைக் கைவிட்டு விட்டு இருவரும் அந்த பொறியாளர் உடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் தனித்தனியாக வீடு எடுத்து இரண்டு மனைவிகளையும் பொறியாளர் வசித்து வருகிறார்.
முதல் மனைவியுடன் மூன்று நாட்களும், இரண்டாவது மனைவியுடன் மூன்று நாட்களும் வாரத்தில் ஆறு நாட்கள் வாழ்ந்து வருகிறார். வாரத்தில் ஒரு நாட்கள் இவருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாள் இவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு மனைவிகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.