மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி

மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2023-07-08 20:28 GMT

ஜெய்ப்பூர்,

மத்திய மந்திரி கஜேந்திர சிங் சிகாவத் கடந்த 27-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோதாபூரில் நிகழ்ச்சி ஒன்று பங்கேற்றார். அப்போது அவர் பைக்கில் அணுவகுப்பாக சென்றார். அவரின் பாதுகாப்பிற்கு பல்வேறு கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்றன.

அப்போது, பாதுகாப்பு வாகனம் பைக்கில் வந்த ஜெக்தீஷ் சுதர் (வயது 27) என்ற இளைஞர் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த ஜெக்தீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெக்தீஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜெக்தீஷின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜெக்தீஷின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்