காதலியின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதலித்ததால் 30 வயது நபர் கொலை - 3 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் காதலியின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதலித்ததால் தீபக் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-06-09 19:30 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் காதலியின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதலித்ததால் தீபக் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தீபக் யாதவ் (வயது 30) பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கிஷன் யாதவ் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு கிஷன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தீபக் புதன்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு சில மணி நேரம் கழித்து கிராமத்திற்கு வெளியே காயங்களுடன் அவரது உடலை தீபக்கின் குடும்ப உறுப்பினர்கள் கண்டெடுத்தனர்.

அவரது உடலில் இருந்த காயங்களில் இருந்து தீபக் மரக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. காயங்கள் மற்றும் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது.

தீபக்கின் மரணம் தொடர்பாக போலீசார் கிஷன் மற்றும் அவரது குடும்பத்தினர் சாந்தன் மற்றும் சுரேஷ் ஆகிய 3 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்