உனது சொந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் -பெண் எம்.பி.க்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
மொய்த்ரா தனது சொந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் பெண் எம்.பி.க்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கொல்கத்தா
மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் 2016 இல் நாடியாவில் உள்ள கரீம்பூர் தொகுதியில் இருந்து டி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், 2019 தேர்தலில், அவர் கிருஷ்ணகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மஹுவா மொய்த்ராவின் சொந்தப் பகுதியும் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியுமான நாடியா மாவட்டத்தில் கட்சியின் நிலை குறித்து கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி
கரீம்பூர் இனி மஹுவாவின் அதிகார வரம்பு அல்ல. அது அபு தாஹரின் கீழ் உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் உங்கள் தொகுதியை கவனித்துக் கொள்ளுங்கள்,
மொய்த்ரா தனது சொந்த தொகுதிக்கு அப்பால் கட்சியின் விவகாரங்களில் தலையிடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு பானர்ஜி கேட்டுக் கொண்டார்.
மமதா பானர்ஜி மொய்த்ராவை பகிரங்கமாக கண்டிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், கட்சியின் உள் நிர்வாகக் கூட்டத்தில் பானர்ஜி மொய்த்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.