கொரோனாவின் புதிய மாறுபாட்டால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்: எச்சரிக்கும் மராட்டிய அரசு

மராட்டியத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Update: 2022-10-17 18:01 GMT

கோப்புப்படம் 

மும்பை,

மராட்டியத்தில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 17.7 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை இன்று நாட்டிலேயே முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவின் புதிய உருமாற்றமான எக்ஸ்பிபி மாறுபாட்டை மேற்கோள் காட்டி, இந்த புதிய மாறுபாடு, பண்டிகை மற்றும் குளிர்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

மராட்டியத்தில் அக்டோபர் 3 மற்றும் 9 க்கு இடையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, ​​அக்டோபர் 10-16 காலகட்டத்தில் புதிய கொரோனா தொற்றின் எண்ணிக்கை 17.17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மக்கள்தொகை அதிகம் உள்ள தானே, ராய்காட் மற்றும் மும்பையில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளை மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும், விரைவில் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்