கர்நாடகாவில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-28 06:29 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்து உள்ளது.

அதே போல அங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டத்லும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இங்கு 2.3 ரிக்டர் அளவில் நில அதிவானது ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்