நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே சொல்ல முடியாது- மோகன் பகவத்
அமைதியாக இருப்பதற்கு பதில் சிலர் மின்னலைப் போல பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என மோகன் பகவத் தெரிவித்தார்.;
புதுடெல்லி,
நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே அறிவிக்க முடியாது" என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:-
அமைதியாக இருப்பதற்கு பதில் சிலர் மின்னலைப் போல பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மின்னல் வெட்டி முடித்த பின்பு முன்னை விட இருள் அதிகமாகி விடும். அதனால் சேவகர்கள் தீபத்தைப் போல பிரகாசித்து தேவைப்படும் போது ஒளிர வேண்டும்" என்று தெரிவித்தார்.