41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் இருந்து வெளியேற எத்தனை மணி நேரம் ஆகும் - தேசிய பேரிடர் மேலாண்மை தகவல்
தொழிலாளர்களை மீட்பதற்காக 58 மீட்டர் வரை துளையிடும் பணி முடிந்துள்ளது.;
உத்தர்காசி,
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தி அறிய ஒட்டு மொத்த தேசமும் ஆவலுடன் உள்ளது.
இந்தநிலையில், மீட்பு பணி குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி,
தேசிய பேரிடர் மீட்புப்படை மட்டுமின்றி ராணுவம், விமானப்படையை சேர்ந்த அதிகாரிகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களை மீட்பதற்காக 58 மீட்டர் வரை துளையிடும் பணி முடிந்துள்ளது. இன்னும் 2 மீட்டர் மீதமுள்ளது. சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேற 3-ல் இருந்து 5 நிமிடங்கள் வரை ஆகும். 41 பேரும் வெளியேற 3 - 4 மணி நேரங்கள் ஆகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.