கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி.க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-12 11:09 GMT

கவராத்தி,

லட்சத்தீவு எம்.பி.யாக இருக்கும் முகமது பைசல் என்பவர், கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சையீதின் மருமகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது சாலி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முகமது பைசல், அரசியல் உள்நோக்கங்களுக்காக தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாவும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்