லடாக்கில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!

லடாக்கில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-09-16 01:12 GMT

ஸ்ரீநகர்,

லடாக்கில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அல்ச்சிக்கு (லே) வடக்கே 189 கி.மீ. வடக்கு பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 4.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்