சீட்டாக்கள் உறைவிடத்திற்கு தேவையான இடவசதி குணோ தேசிய பூங்காவில் உள்ளது; மத்திய பிரதேச அரசு

குணோ தேசிய பூங்காவில் 20 முதல் 25 சிறுத்தை புலிகள் வசிக்கவும் வேட்டையாடவும் போதுமான இடவசதி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-18 05:04 GMT

போபால்,

நமது நாட்டில் சிறுத்தைகள் இருக்கின்றன. ஆனால் சீட்டா என்ற அழைக்கப்படுகிற சிறுத்தைப் புலிகள் இனம் இல்லை. இந்தியாவில் இருந்த கடைசி சிறுத்தைப் புலி, 1948-ல் சத்தீஷ்காரின் கோரிய பூங்காவில் இறந்து விட்டது.இதையடுத்து இந்தியா சிறுத்தைப்புலிகள் இல்லாத நாடாக 1952-ல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சிறுத்தைப்புலி இனத்துக்கு புத்துயிரூட்ட வும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 5 பெண், 3 ஆண் என 8 சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு ஆனது. இதன்படி கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தை புலிகளும் நேற்று குணோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இந்த பூங்காவில் சிறுத்தை புலிகள் வேட்டையாடவும் நடமாடவும் போதுமான இடவசதி உள்ளதா? என சந்தேகங்கள் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், குணோ தேசிய பூங்காவில் 20 முதல் 25 சிறுத்தை புலிகள் வசிக்கவும் வேட்டையாடவும் போதுமான இடவசதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். வனவிலங்குகள் பாதுகாப்பாகவும் வன உயிரினங்களின் புத்துயிருக்கும் மத்திய பிரதேசம் மிகச்சிறந்த இடம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்