கேரளா: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் பணிநீக்கம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-08-13 13:36 GMT

கோப்புப்படம் 

கொச்சி,

கேரள மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சையளிக்க குழந்தையின் பெற்றோர் எர்ணாகுளம் அருகே அங்கமல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அந்த குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசியை போட்டுள்ளார். மற்றொரு குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செவிலியர் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட அம்மாநில சுகாதாரத் துறை, மருத்துவமனையில் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய செவிலியரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்