பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை வழங்கினார்.

Update: 2024-08-27 11:21 GMT

புதுடெல்லி,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி சென்றுள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து வயநாட்டில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்குமாறும், முதற்கட்டமாக ரூ.900 கோடியை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடி பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு ,டெல்லியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்தித்தது முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்