டெல்லி பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு!

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-11-05 17:01 IST

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லருடன் ஒப்பிட்டு டெல்லி பாஜக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் என்ற நிலையிலேயே தொடர்கிறது. இதன் காரணமாக, காற்றின் தரம் மேம்படும் வரையில் சனிக்கிழமை முதல் டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பக்கா பாஜக அலுவலகம் முன்பு, அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒன்றை வைத்துள்ளார்.

அந்த போஸ்ட்டரில், 'தான் வாழும் நகரினை எரிவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் உலகின் இரண்டாவது தலைவர் கெஜ்ரிவால். முதலமாவர் ஹிட்லர்', பொது நலன் கருதி தஜேந்திர பால் சிங் பக்கா என்று தனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து தஜிந்தர் பால் சிங் பக்கா கூறுகையில், "டெல்லியில் காற்று மாசினால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் வேளையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்