காஷ்மீர்: வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் பலி

காஷ்மீரில் வாகனம் ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-10-31 14:20 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே குப்வாரா மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் கர்நா பகுதியில் நவகப்ரா என்ற இடத்தில் சென்றபோது, திடீரென சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். வாகனத்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் தங்தார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்