கர்நாடகத்தில் 435 புலிகள் உள்ளன-மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பேட்டி

கர்நாடக வனம்-சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூருவில் நேற்று புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2023-07-27 18:45 GMT

பெங்களூரு:-

தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் யானை மற்றும் இதர விலங்குகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அதிகமாக உள்ளது. புலிகளை காப்பதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்டது. மாநிலத்தில் நாகரஒலே, பந்திப்பூர், பிளிகிரிரங்கணபெட்டா உள்பட 17 வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. அனைத்து வனப்பகுதிகளிலும் மொத்தம் 5 ஆயிரத்து 399 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் 66 லட்சம் வனவிலங்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் கர்நாடகத்தில் 404 புலிகள் இருப்பது தெரியவந்தது. இதை வனவிலங்குகள் புள்ளி விவரங்கள்படி அதன் எண்ணிக்கை 573 வரை இருக்கும் என்று சொல்லப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 435 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். நமது நாட்டில் காடுகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காரணம்.

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்