'இது பேருந்து நிலையம் அல்ல, மசூதி' - புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்க வேண்டும்: பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு!

அந்த பேருந்து நிலையம் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ளது.

Update: 2022-11-14 16:12 GMT

மைசூரு,

கர்நாடகாவில் பேருந்து நிலையம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது. ஆகவே அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டுமென்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ள பா.ஜ.கவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா.

அந்த பேருந்து நிலையம் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ளது. அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையில் இறங்காவிட்டால், நானே நேரடியாக புல்டோசர் கொண்டு அந்த கட்டமைப்பை தகர்ப்பேன் என்று பிரதாப் சிம்ஹா சவால் விட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:- "சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறேன். பேருந்து நிலையம் மசூதியை போன்று இரண்டு மாடகோபுரங்களைக் கொண்டுள்ளது. அது மசூதி தான். இன்னும் 3-4 நாட்கள் கால அவகாசம் உள்ளது என்று பொறியாளர்களிடம் கூறியுள்ளேன். இல்லையெனில், ஜேசிபி வாகனம் மூலம் அதை தகர்ப்பேன்" என்று கூறினார்.

முன்னதாக ஹிஜாப் சர்ச்சையின் போது, இவர் அம்மாநில எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவரான சித்தராமையாவை பார்த்து சித்த'ரஹீம்'மையா என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்