74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார், புதிய தலைமை நீதிபதி
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி லலித் 74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி லலித் 74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார். நவம்பர் 8-ந் தேதி அவரது பதவிக்காலம் முடிந்து விடும்.
65 வயதாகிறபோது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்காலமும், 62 வயதாகும்போது ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவிக்காலமும் முடிவுக்கு வரும்.
100 நாட்களுக்கும் குறைவான பதவிக்காலத்தை மட்டுமே கொண்டிருக்கும் 6-வது தலைமை நீதிபதி என்ற பெயரை லலித் பெறுகிறார்.
இதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளாக கமல் நாராயண் சிங் 18 நாட்களும், எஸ்.ராஜேந்திரபாபு 30 நாட்களும். ஜே.சி.ஷா 36 நாட்களும், ஜி.பி.பட்நாயக் 41 நாட்களும், எல்.எம்.சர்மா 86 நாட்களும் பதவி வகித்துள்ளனர்.