யாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு; ஜம்மு காஷ்மீரில் சில இடங்களில் முழு அடைப்பு

ஜம்மு கஷ்மீரில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-25 10:15 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரும் பிரிவினைவாத தலைவருமான யாசின் மாலிக் 'பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டி' கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்டங்களாக என்ஐஏ விசாரணை செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. யாசின் மாலிக்கிற்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் 25 ஆம் தேதி (இன்று) அளிக்கப்படும் என அன்றைய தினம் நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி, யாசின் மாலிக்கிற்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்த வாதம் நடைபெற்று வந்தது. யாசின் மாலிக்கிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் வாதாடியது. தண்டனை குறித்த வாதங்கள் முடிந்த நிலையில், இன்று மாலை நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க உள்ளது.

இதனால், ஜம்மு கஷ்மீரில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுப்போக்குவரத்து வழக்கம் போல் இயங்கினாலும் கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்