சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கீதத்தை இசை கருவிகளால் வாசித்து சிறப்பித்த ஜப்பான் தூதரக பணியாளர்கள்!
இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் தேசிய கீதத்தை இசைத்தும் பாடியும் ஜப்பான் தூதரகம் சிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் தேசிய கீதத்தை இசைத்தும் பாடியும் ஜப்பான் தூதரகம் சிறப்பித்துள்ளது.
ஜப்பானிய தூதரக அலுவலகத்தில் ஜப்பானிய தூதரக பணியாளர்கள்( இந்தியா மற்றும் ஜப்பானை சேர்ந்தவர்கள்) இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
அவர்கள் அனைவரும் தாங்கள் இசை கருவிகளால் வாசித்த இசைக்கேற்ப தேசிய கீதத்தை பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வீடியோவை ஜப்பான் தூதர் சந்தோஷி சுசுகி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "நமஸ்காரம், ஜப்பான் தூதரகம், இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய தேசிய கீதத்தின் குரல் மற்றும் இசைக்கருவியை வழங்குகிறது.
இந்தியாவின் 75 புகழ்பெற்ற சுதந்திர ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த இசைக் கொண்டாட்டத்தில் எங்களுடன் சேருங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.