நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை கண்டித்து காஷ்மீரில் கடையடைப்பு
நபிகள் நாயகம் குறித்து 2 பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் பலத்த எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.;
ஸ்ரீநகர்,
நபிகள் நாயகம் குறித்து இரண்டு பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் பலத்த எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. இந்த கருத்துகளை கண்டித்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று கடையடைப்பு நடந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.
பிரதான சாலைகளில், சில இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஆகியவை இயங்கின. இருப்பினும், வழக்கமான பரபரப்பு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.