ஜம்மு காஷ்மீர்: டிரக் மீது கார் மோதியதில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் கார் அருகில் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார் ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றதாக கூறிய துணை போலீஸ் சூப்பிரண்டு பர்தீப் குமார் சென், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.