இந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளதா? ப.சிதம்பரம் கேள்வி
கடந்த நிதி ஆண்டில் இருந்த 6.7 சதவீத அளவுக்கு நிதி பற்றாக்குறையை வைத்திருக்க முயற்சிப்போம் என்று கூறுகிறது.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை 6.4 சதவீதமாக கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதை தெரிவித்த சில மாதங்களில் மத்திய அரசு பின்வாங்கி உள்ளது. இப்போது, கடந்த நிதி ஆண்டில் இருந்த 6.7 சதவீத அளவுக்கு நிதி பற்றாக்குறையை வைத்திருக்க முயற்சிப்போம் என்று கூறுகிறது.அதிகமான நிதி பற்றாக்குறை, பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு. இவையெல்லாம் உணர்த்துவது என்ன? இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.