ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது சட்ட நடவடிக்கை-ரோகிணி சிந்தூரி அறிக்கை

மனநிலை பாதித்தவர் என தாக்கியதுடன் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-02-19 20:43 GMT

பெங்களூரு:-

இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மனநிலை பாதிப்பு என்பது ஒரு பெரிய பிரச்சினை. இதற்கு மருந்து-மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இது பொறுப்பான பதவியில் இருப்பவர்களை பாதிக்கும்போது, அது பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும். எனக்கு எதிராக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது. அவர் இதுவரை பணியாற்றிய ஒவ்வொரு இடத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். தற்போது பணியாற்றும் இடத்திலும் அவ்வாறு செய்துள்ளார். அவர் எப்போதும் ஊடக வெளிச்சத்தை பெற ஆசைப்படுகிறார். இதற்கு அவரது சமூக வலைத்தள கணக்கு ஆதாரமாக உள்ளது. தனது பணியில் கவனம் செலுத்துவதைவிட யாராவது ஒருவரை இலக்காக கொண்டு தவறான செய்திகளை பரப்புவதை தனது பொழுது போக்காக கொண்டுள்ளார். இந்திய தண்டனை சட்டத்தின்படி எனக்கு எதிராக அவர் கூறிய தகவல்கள் சட்டத்திற்கு எதிரானது, கிரிமினல் குற்றம் ஆகும். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். எனது புகைப்படங்களை எனது சமூக வலைத்தளத்தில் இருந்து 'ஸ்கிரீன் ஷாட்' மூலம் எடுத்துள்ளார். அதை எனக்கு எதிராக தவறான முறையில் பிம்பித்து வெளியிட்டுள்ளார். நான் புகைப்படங்களை அனுப்பியதாக கூறும் அதிகாரிகளின் பெயரை அவர் கூற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்