கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி - இந்திய ராணுவம் தகவல்
‘புலந்த் பாரத்’ என்ற பெயரில், கொல்கத்தாவின் கிழக்கு கமாண்ட் படையில் உள்ள உயரமான பீரங்கி தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 'புலந்த் பாரத்' என்ற பெயரில், கொல்கத்தாவின் கிழக்கு கமாண்ட் படையில் உள்ள உயரமான பீரங்கி தளத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மற்றும் தவாங் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறப்பு படைகளுக்கு விமானப்படை, மத்திய ஆயுதப் படை ஒருங்கிணைப்புடன், பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூடு திறன் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.