இந்தியாவின் நீளமான ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 4 நாட்கள் இயக்கம்..!

இந்தியாவின் நீளமான ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-08 20:52 GMT

கோப்புப்படம் via dt next

கவுகாத்தி,

அசாம் மாநிலம் திப்ருகர் நகரிலிருந்து கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படும் நாட்டின் மீக நீள ரெயிலான 'விவேக் எக்ஸ்பிரஸ்' கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 19 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், ஒன்பது மாநிலங்கள் வழியாக 4,189 கிமீ தூரத்தை ஏறக்குறைய 80 மணி நேர பயண நேரத்தில் கடந்து செல்கிறது.

இந்த நிலையில் வாரத்திற்கு இருமுறை இயக்கப்பட்டு வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நான்கு நாட்களாக அதிகரிக்க ரெயில்வே ஆணையம் முடிவு செய்துள்ளதாக வடகிழக்கு எல்லை ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யசாச்சி டி தெரிவித்துள்ளார்.

திப்ருகரில் இருந்து வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் (திப்ருகர் - கன்னியாகுமரி) விவேக் எக்ஸ்பிரஸ், வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் ஒவ்வொரு சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும். அதேபோல், கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் (கன்னியாகுமரி - திப்ருகர்) விவேக் எக்ஸ்பிரஸ், வருகிற மே 11 முதல் ஒவ்வொரு புதன், வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும்.

ரெயிலின் தற்போதைய நேரம் மற்றும் நிறுத்தங்கள் மாறாமல் இருக்கும் என்றும் ரெயிலின் நிறுத்தங்கள் மற்றும் நேரங்கள் பற்றிய விவரங்கள் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளத்திலும் என்.டி.இ.எஸ் (NTES) மூலமாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்