மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்வு

ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

Update: 2024-05-31 13:28 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மார்ச் மாத காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் 2024-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இருந்த 8.6 வளர்ச்சி விகிதத்தை விட ஜனவரி-மார்ச் மாத காலகட்டத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2022-23 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 6.2 சதவீதமாக இருந்ததாகவும், 2022-23ம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 2024-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சீனா 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்