லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ரெயில்வே அமைச்சகம்
ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40.19 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.;
புதுடெல்லி,
ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் 2,140 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்று பல்வேறு ரெயில்வே துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40 லட்சத்து 19 ஆயிரத்து 516 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்ட சாதனையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் தற்போது வழங்கியுள்ளது.