அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் இந்தியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வைத்திருக்கும் - அதுல் ரானே பேச்சு

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வருபவர் அதுல் ரானே.

Update: 2022-06-13 10:22 GMT

Image Courtesy : ANI 

புதுடெல்லி,

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டது என அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இந்திய-ரஷ்ய பன்னாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும் .

இது புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருபவர் அதுல் ரானே. இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், " பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டது. இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில், பிரம்மோஸ் மூலம் நமது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பெற முடியும் " என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்