பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் 10-வது குற்றவாளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி

பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் 10-வது குற்றவாளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-01 16:55 GMT

சிவமொக்கா: பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் 10-வது குற்றவாளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஹர்ஷா கொலை வழக்கு

சிவமொக்கா டவுன் சீ.கே.ஹட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள பிரமுகரான இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தின்போது பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹர்ஷா கொலை வழக்கில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷா கொலை வழக்கு விசாரணை பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதற்கிடையே ஹர்ஷா கொலை வழக்கில் 10-வது குற்றவாளியாக கைதான ஜாபர் சித்திக் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை என்.ஐ.ஏ. கோர்ட்டில் நேற்றுமுன்தினம் நடந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் பிரசன்னகுமார் குற்றவாளியை ஜாமீனில் விடுவித்தால் வழக்கு விசாரணை பாதிக்கக்கூடும், அதனால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யும்படி வலியுறுத்தினார். இதையடுத்து நீதிபதி, ஜாபர் சித்திக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்