சிவமொக்காவில் வாக்கு எந்திரங்கள் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சிவமொக்கா அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்கள் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-05-11 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்கள் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிந்தது. நாளை(சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு 'சீல்' வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவமொக்கா டவுன் பி.எச்.சாலையில் உள்ள அரசு சகாயாத்திரி கல்லூரியில் வைக்கப்பட்டது.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார்  தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அடையாள அட்டையுடன்...

நாளை வாக்கு எண்ணப்படுவதையொட்டி அந்தந்த கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தங்களது அடையாள அட்டையுடன் வர வேண்டும். அவ்வாறு வருபவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்