குடகில் பாம்பு முட்டையிடும் வீடியோ வைரல்

குடகில் பாம்பு முட்டையிடும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.

Update: 2022-10-13 18:45 GMT

குடகு;


மலைப்பகுதிகளில் அதிகளவு பாம்புகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். ஆனால் அந்த பாம்புகள் இனப்பெருக்கம் செய்வது மற்றும் முட்டை, குட்டியிடுவதை வெளிப்படையாக வைத்து கொள்ளாது. பாறை இடுக்கு அல்லது புதர்களுக்குள்தான் முட்டை மற்றும் குட்டி இடும். அந்த வகையில் பொது இடங்களில் பாம்பு முட்டை மற்றும் குட்டிகள் இடுவதை பார்ப்பது மிகவும் அரிது.

இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் பாம்பு முட்டையிடும் காட்சியை பாம்பு பிடி வீரர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பது வைரலாகியுள்ளது. குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாபுராவை சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் குஷால்நகரை அடுத்த குடேஒசூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த மீன் பண்ணை அருகே கற்களுக்கு இடையில் நிரோல் வகை பாம்பு ஒன்று முட்டையிட்டு கொண்டிருந்தது. இதை சுரேஷ் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு முட்டையிடும் காட்சிகள் தத்ருவமாக பதிவாகியுள்ளது.

அந்த ஒரு பாம்பு மட்டும் சுமார் 19 முட்டைகளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த முட்டைகளை கைப்பற்றிய அவர், அதை பத்திரமாக வீட்டில் அடைகாக்க வைத்துள்ளார். பாம்பை பிடித்து விராஜ்பேட்டை வனப்பகுதியில் விட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்