கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் சேர குழந்தைக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும்

கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் சேர குழந்தைக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-13 18:45 GMT

பெங்களூரு: பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-தேசிய கல்வி கொள்கையில், பள்ளியில் குழந்தை சேர 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் சேர குழந்தைக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதை வருகிற 2025-26-ம் ஆண்டு முதல் அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விதிமுறை நாட்டில் 23 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. கர்நாடகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மழலையர் பள்ளிகளில் இந்த விதிமுறை அதற்கேற்ப அமல்படுத்தப்படும்.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளி வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மதிப்பீடு செய்ய 5 மற்றும் 8-ம் வகுப்பில் திறன் மதிப்பீட்டு தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்