கடபாவில் ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

கடபாவில் ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து: கொண்டார்.;

Update:2023-06-25 00:15 IST

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கோடிம்பாடியை அடுத்த நெக்கிலாடியில் குமாரதாரா ஆறு ஓடுகிறது. நேற்று முன்தினம் இந்த ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கடபா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்த தர்மய்யா (வயது 45) என்று தெரியவந்தது. இவர் நெக்கிலாடியில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவர் குமாரதாரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து கடபா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்