கேரளாவில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-08-04 12:03 GMT

திருவனந்தபுரம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில், கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் ஏனைய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் போன்ற பல்வேறு ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டுகிறது.நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக, பல குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்