ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்து பக்தர்கள் காயம்

பூரி ஜெகநாதர் கோவிலில் ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்த சம்பவத்தில் 9 பக்தர்கள் காயமடைந்தனர்.

Update: 2024-07-09 21:45 GMT

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இந்து மத வழிபாட்டு தலமான உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 7ம் தேதி ரத யாத்திரை நடைபெற்றது. இதில் பலராமர், கிருஷ்ணர், சுபத்ரா ஆகிய கடவுள் சிலைகள் தனித்தனி தேரில் நகர் முழுவதும் யாத்திரையாக கொண்டுவரப்பட்டன. இதை தொடர்ந்து பிற கடவுள் சிலைகளும் யாத்திரையாக நகர் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பூரி ஜெகநாதர் கோவில் உள்ள கடவுள் பாலபத்ராவின் சிலை நேற்று யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ரத யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடவுள் பாலபத்ராவின் சிலை சரிந்து பக்தர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்