பல்கலைக்கழக ஊழியர்கள் 20 பேரை நீக்க ஐகோர்ட்டு தடை
பல்கலைக்கழக ஊழியர்கள் 20 பேரை நீக்க கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் 20 பேரை சமீபத்தில் பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட 20 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் தாங்கள் பணியில் சேரும் போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்று எங்களிடம் நிரப்ப கொடுத்த விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை.
பணியில் இருந்து நீக்கியதால் நாங்களும், எங்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜோதி மூலிமணி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது 20 ஊழியர்களின் பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.