மாவட்ட பொறுப்பு மந்திரியாக மீண்டும் அசோக் வந்தால் வரவேற்பேன்

மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக மீண்டும் அசோக் வந்தால் வரவேற்கிறேன் என்று விளையாட்டுத்துறை மந்திரி நாராயண கவுடா கூறியுள்ளார்.

Update: 2023-02-15 16:16 GMT

மண்டியா:-

பொறுப்பு மந்திரி பதவி

மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக யாரை நியமிப்பது என்பதில் மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக கோபாலய்யா பொறுப்பு வகித்து வந்தார். சிறப்பாக பணியாற்றி வந்தவரை தேர்தல் வியூகம் வகுக்கபோவதாக கூறி, கட்சி தலைமை பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு பதிலாக வருவாய் துறை மந்திரியான அசோக் நியமிக்கப்பட்டார். இதனால் மண்டியா பா.ஜனதா பிரமுகர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அசோக்கை மாற்றவேண்டும் என்று சிலர் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து கோ பேக் அசோக் என்று சுவரரொட்டிகள் ஒட்டி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு அசோக்கை மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து நீக்கியது. இதையடுத்து அடுத்து யார் மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்வத்நாராயைன நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அசோக்?

ஆனால் மண்டியா பா.ஜனதா பிரமுகர்கள், கோபாலய்யாவை மீண்டும் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் விளையாட்டுத்துறை மந்திரி கே.சி.நாராயணகவுடா, நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மண்டியா பா.ஜனதா கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் ஒன்றுமையுடன்தான் இருக்கிறோம். அடுத்த மாவட்ட பொறுப்பு மந்திரி யார் என்பது தெரியவில்லை. ஒரு வேலை மீண்டும் அசோக் பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்படால், அதனை வரவேற்போம். ஆனால் இந்த விஷயத்தில் கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதனை வரவேற்வோம் என்று கூறினார். நாராயணகவுடாவின் இந்த பேச்சு மண்டியா பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் இருப்பதை மீண்டும் உறுதி செய்வது போன்று அமைந்திருப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்