லிப்ட் கொடுத்த ஆண்களிடம்...கிப்ட் கேட்ட இளம்பெண் கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பாலியல் வன்கொடுமை புகாரளித்தால் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்று கூறியும் அவர் மிரட்டி வந்துள்ளார்.

Update: 2024-01-03 15:36 GMT

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சாஸ்திரிபுரத்தை சேர்ந்தவர் சுமையா சுல்தானா (வயது 30).  இவர் பணம் சம்பாதிக்க ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அது என்னவென்றால் காரில் தனியாக செல்லும் ஆண்களை நோட்டமிடுவராம். அப்போது தனியாக காரில் வரும் ஆண்களை அணுகி லிப்ட் கேட்பாராம்.

இவரது பேச்சின் அழகில் விழுந்த ஆண்கள் அவருக்கு லிப்ட் கொடுப்பார்களாம். சிறிது தூரம் பயணம் செய்த பிறகு உடனடியாக தனது ஆடைகளைக்கிழித்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகாரளிப்பேன் என ஓட்டுநரை பயமுறுத்துவராம் அதற்கு பயந்து சில ஓட்டுநர்கள் இவரிம் கேட்ட பணத்தை வீசி விட்டு  விட்டால் போதும் என்று ஓடிவிடுவார்களாம். பணத்தை தர மறுக்கும் கார் டிரைவர்களை பாலியல் வன்கொடுமை புகாரளித்தால் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்று அவர்களை மிரட்டுவாராம். இதற்கு ஒத்துழைக்காத பல அப்பாவிகள் மீது வழக்கு கொடுத்துவிட்டு இவர் தப்பி ஓடி விடுவராம்.

இந்தநிலையில் அதேபோன்று ஒரு கார் ஓட்டுநரிடம் தனது வேலையை காட்டி உள்ளார். இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து களத்தில் இறங்கிய போலீசார் இளம்பெண் மற்றும் கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்தான் குற்றவாளி என தெரிய வந்தது. இதனையடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சில ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண்ணை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர், சஞ்சல்குடா மகளிர் சிறப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மீது ஐதராபாத்தில் 17 வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்