தினமும் காலையில் சிபிஐ-யின் ஆட்டத்தை தொடங்குகிறார்கள் - இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும்? -அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-21 08:15 GMT

புதுடெல்லி,

டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், கடந்த ஆண்டு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் கமிஷனர் அரவா கோபி கிருஷ்ணா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பணவீக்கத்துடன் சாமானியர்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மாறாக முழு நாட்டுடனும் சண்டையிடுகிறார்கள் . தினமும் காலையில் எழுந்து சிபிஐ ,அமலாக்கதுறையின் ஆட்டத்தை தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும்? என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்