அயோத்தியில் இருந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடங்கும்: இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை

அயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த முடிவு ஒன்று உள்ளது.

Update: 2024-01-08 03:26 GMT

லக்னோ,

இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் அதர் உசைன், அயோத்தி ராமர் கோவில் பற்றி பேசும்போது, நாட்டின் ஜனநாயகத்தில் நம்முடைய அரசியல் சாசனம் ஒரு முக்கிய தூணாக உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கு முன்பே, என்ன முடிவு வருமோ அது ஏற்று கொள்ளப்படும் என்று நாங்கள் அனைவரும் கூறினோம். இந்த நிகழ்ச்சியின் வெற்றி மீது எந்தவொரு இந்தியரும், எந்த கேள்வியையும் எழுப்ப கூடாது என கூறினார்.

அயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த முடிவு ஒன்று உள்ளது.

நாம், கடவுள் ஸ்ரீராம் எல்லோரும் வந்த பகுதி இந்த ஆவாத் பகுதி. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து மக்களும் ஒரு பொதுவான பாரம்பரியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பொதுவான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ராமர் உள்ளார்.

அயோத்தியில் இருந்து லக்னோ வரை, பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்கள், முஸ்லிம்கள் எப்படி தோளோடு தோள் நின்று எதிர்த்து போரிட்டார்கள் என்பது நம்முடைய வரலாறு.

வருகிற நாட்களில் இந்தியா சிறப்படையும் என்று நம்புகிறோம். ஒட்டுமொத்த உலகத்தின் முன்னால், நம்முடைய ஒற்றுமையை நாம் பகிர்வோம். அது அயோத்தியில் இருந்து தொடங்கும் என்று கூறினார்.

கும்பாபிஷேகத்திற்கு முன், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி விடும் வகையில் சில தலைவர்கள் பேசுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் போலீஸ் படையை தனிநபர்கள் நம்ப வேண்டும் என கூறினார். அந்த நாளில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறுவது தவறானது.

ராமர் கோவிலுக்கு 22 கி.மீ. தொலைவில் அயோத்தியில் பெரிய மசூதி கட்டுவதற்கான அனைத்து பணிகளும் தயாராகி நிறைவடைந்து வருகின்றன என குறிப்பிட்டார். அதற்கான நிதி சேகரிப்புக்கான அனைத்து பணிகளை பற்றியும் பேசப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்