ஒரே மாதத்தில் 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள 4 மலைகள் மீது ஏறி சாதனை படைத்த இந்திய மலையேற்ற வீராங்கனை
இமாச்சலப் பிரதேச மலையேற்ற வீராங்கனை ஒரே மாதத்தில் 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள 4 மலைகள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
காத்மாண்டு,
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான மலை ஏறும் வீராங்கனை எம்.எஸ். கவுர். இவர் உலகின் நான்காவது உயரமான மலையான லோட்சே மலையை வெற்றிகரமாக ஏறி முடித்துள்ளார்.
இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் அதாவது, ஒரு மாதத்திற்குள் 8,000 மீட்டர் உயரமுள்ள நான்கு சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய மலையேறுபவர் என்ற பெருமையை பல்ஜீத் கவுர் பெற்றுள்ளார்.
அவர் பால்ஜீத் மற்றும் மிங்மா ஏப்ரல் 28 அன்று அன்னபூர்ணா I (8,091 மீட்டர்) மற்றும் மே 12 அன்று காஞ்சன்ஜங்கா (8,586 மீட்டர்) மலையை அடைந்தனர்.
மே 21 அன்று, அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் (8,849 மீட்டர்) ஏறினார்.