நடிகை பாவனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் தொண்டர்

நடிகை பாவனாவுடன் பெண் தொண்டர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-07-26 15:44 GMT

பெங்களூரு:

கன்னட திரையுலகின் பிரபல நடிகையாக இருப்பவர் பாவனா. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த சில ஆண்டுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்திருந்தார். தற்போது மீண்டும் அவர் காங்கிரசில் சேர்ந்துவிட்டார். இந்த நிலையில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் மவுன தர்ணா போராட்டம் நடந்தது.


இதில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் கலந்துகொண்டனர். அதுபோல் நடிகை பாவனா விழா மேடையில் அமர சென்றார். அப்போது காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவர், பாவனாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண் தொண்டர், மேடையில் இருந்து இறங்கி கீழே போய் இருங்கள். பா.ஜனதாவுக்கு சென்றுவிட்டு எதற்கு மீண்டும் இங்கே வந்தீர்கள் என்று கேள்வி கேட்டு அதிரவைத்தார். உடனே அங்கிருந்த நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். அதன்பிறகு மேடையில் அமர்ந்து நடிகை பாவனா போராட்டத்தில் பங்கேற்றார்.

இதில் அவர் பேசுகையில், 'நான் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு சென்றேன். இது ஒரு அவசர நடவடிக்கை என உணர்ந்தேன். அதனால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். பா.ஜனதாவில் சேர்ந்தது மிகப்பெரிய தவறு. அதை உணர்ந்ததால் இன்று காங்கிரசில் சேர்ந்துள்ளேன். காங்கிரசை ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்